முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மரியாதை

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் நேற்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி டெல்லியில் உள்ள சர்தார் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதே போல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணை நிலை ஆளுநர் அனில் பாஜ்பாய் மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.  

சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம், நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது. இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து