முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டேலின் வாழ்க்கை குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியப்படுத்த வேண்டும் : துணை ஜனாதிபதி வெங்கையா ஆதங்கம்

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சர்தார் பட்டேலின் கனவை நனவாக்க பாடுபடுமாறு மக்களுக்கு துணை ஜனாதிபதி அறைகூவல் விடுத்துள்ளார். 

இந்தியாவை ஒன்றிணைத்தவரான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அவரது பிறந்த நாளான நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ச அஞ்சலி செலுத்தினார். தாம் மிகவும் போற்றும் தலைவர் படேல் என்று அவர் கூறினார். 

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள துணை ஜனாதிபதி , சர்தார் வல்லபாய் பட்டேல் செய்த மிகப்பெரிய பங்களிப்புகளை நினைவு கூர்ந்ததோடு, மக்கள், குறிப்பாக இளைஞர்கள், நவீன இந்தியாவைக் கட்டமைக்க அவர் அளித்த தன்னிகரில்லா பங்களிப்பை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவை ஒன்றிணைத்து சர்தார் பட்டேலை, அவரது சிறந்த இயல்புகளை அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும் என்று துணை ஜனாதிபதி  கூறினார்.

சர்தார் பட்டேலின் வாழ்க்கை குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற தனது அவாவை வெளிப்படுத்திய நாயுடு, இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்க தனது திறமை, அனுபவம், திட்டமிடல், பேச்சுத் திறன், செயல்திறன் ஆகியவற்றை பட்டேல் பயன்படுத்தியதாகக் கூறினார். 

நாட்டின் உள்துறை அமைச்சராக படேல் கொண்டு வந்து பேணிக்காத்த உள்நாட்டு நிலைத்தன்மை இரும்பு மனிதர் என்ற பட்டத்தை அவருக்குப் பெற்றுத் தந்ததாக நாயுடு மேலும் புகழாரம் சூட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து