முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் ரூ. 30,000 கோடி அளவுக்கு ஊழல்: முதல்வர் நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா : பீகாரில் ரூ.30,000 கோடி அளவுக்கு நிதிஷ்குமார் அரசு ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர்  வேட்பாளரும், ராஷ்ட்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார். 

பீகார் தலைநகர் பாட்டனாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, 

கல்வி, வேலைவாய்ப்பு, பாசனம் மற்றும் மருத்துவம் இவைகள் தான் பீகாரின் முக்கிய பிரச்சனைகள். இதனை ஒரு போதும் நிதிஷ்குமார் பேச மாட்டார். நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் சிறப்பாக மாற்ற நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த காலமே நிலைத்திருக்க நிதிஷ் குமார் விரும்புகிறார். 

பீகாரின் வளர்ச்சி குறித்து, ஜே.பி. நட்டாவுடன் நாங்கள் பொது வெளியில் விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம். பீகாரில் 30,000 கோடி அளவுக்கு மொத்தம் 60 மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று தெரிவித்தார். 

முன்னதாக டுவிட்டரில் பிரதமர் மோடி பேசிய முந்தைய தேர்தல் பிரச்சாரத்தின் வீடியோ ஒன்றை தேஜஸ்வி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருவதற்கு முன்பு நிதிஷ்குமார் மீது பிரதமர் மோடி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து