நிவர் புயல் எதிரொலி : 13 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை : முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

புதன்கிழமை, 25 நவம்பர் 2020      தமிழகம்
Edappadi 2020 11 19

Source: provided

சென்னை : நிவர் புயல் காரணமாக 13 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறையை முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. 

இந்நிலையில் நிவர் புயல் எதிரொலியாக, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து