தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை : டெல்லி துணை முதல்வர் அறிவிப்பு

புதன்கிழமை, 25 நவம்பர் 2020      இந்தியா
Manish-Sisodia 2020 11 25

Source: provided

புதுடெல்லி : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை தற்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை என டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் மனிஷ் சிசோடியா இந்தத் தகவலை தெரிவித்தார். மனிஷ் சிசோடியா மேலும் கூறும் போது, “ தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை” என்றார். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதிலும் தொற்று பரவல் அதிகரிப்பதால், பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து