இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய தொடரில் மாற்றம் : ஒரு டெஸ்ட் போட்டி குறைப்பு

புதன்கிழமை, 25 நவம்பர் 2020      விளையாட்டு
Kollie 2020 11 25

Source: provided

மும்பை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தந்து 5 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

அந்த போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. “5 டெஸ்டுக்கு பதிலாக 4 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும். அதற்கு பதிலாக 20 ஓவர் கிரிக்கெட்டில் கூடுதலாக 2 ஆட்டங்கள் (மொத்தம் ஐந்து 20 ஓவர் போட்டி) சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

மூன்று ஒரு நாள் போட்டியில் மாற்றம் இல்லை. இந்த தொடரை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

இது இரு நாட்டு தொடர் என்பதால் கொரோனா தடுப்பு உயிர்பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது எளிது என்று கூறிய கங்குலி கடந்த 4½ மாதங்களில் மட்டும் ஐ.பி.எல்., கிரிக்கெட் நிர்வாகம் உள்ளிட்ட பணிகளின் போது மொத்தம் 22 முறை தன்னை கொரோனா பரிசோதனைக்குட்படுத்தி கொண்டதாகவும், ஒரு முறை கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. 14-வது ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்தவே அதிகமான முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் பேட்டியின் போது கங்குலி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து