மத்திய குழுவின் தமிழக வருகையில் மாற்றம்

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020      தமிழகம்
Nivar-storm 2020 12 01

Source: provided

சென்னை : நிவர் புயல் சேத பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு தமிழகம் வர இருந்த நிலையில், தற்போது அந்த தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் புயல் பாதிப்பு ஏற்படும் போது, மத்திய குழு தமிழகத்திற்கு வந்து புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை வெளியிடும். இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும். அதன் அடிப்படையில் நிவர் புயலின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நேற்று தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில் மத்திய குழுவின் தமிழக வருகை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 5-ம் தேதி மத்திய குழு தமிழகம் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் நிவர் புயலின் தாக்கம் குறையாத நிலையில், தற்போது மேலும் வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புதிய புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எனவே மத்திய குழு தமிழகத்திற்கு வரும் போது, இரண்டு புயல் பாதிப்புகளை பார்வையிட திட்டமிட்டிருப்பதாகவும், இதனாலேயே மத்திய குழுவின் தமிழக வருகை மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து