சாதனை படைத்த ஹர்திக் பாண்ட்யா - ஜடேஜா ஜோடி

புதன்கிழமை, 2 டிசம்பர் 2020      விளையாட்டு
Hardik-Pandya 2020 12 02

Source: provided

கான்பெர்ரா : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி கான்பெர்ராவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. 

விராட் கோலி அரைசதம் அடித்தாலும் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 32 ஓவர்களில் 152 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 

6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்ட்யா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

ஹர்திக் பாண்ட்யா 92 ரன்களும், ஜடேஜா 66 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 6-வது விக்கெட்டுக்கு அல்லது லோ ஆர்டரில் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து