மும்பை : பா.ஜ.க. எம்.பி.யான பாலிவுட் நடிகர் சன்னிதியோலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
பிரபல இந்தி நடிகரும், பா.ஜ.க. எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பாட்டுள்ள சன்னி தியோலுக்கு இமாச்சலப் பிரதேசம் மணலியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தகவலை இமாச்சலப் பிரதேச சுகாதாரத் துறை செயலர் தெரிவித்தார்.
தற்போது குலுவில் தங்கி இருக்கும் சன்னி தியோல் இதன் காரணமாக மேலும் சில நாள் தங்கி இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோல் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.