மார்கழி மாதத்தையொட்டி சுப்ரபாத சேவைகள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 10 டிசம்பர் 2020      ஆன்மிகம்
tirupati-2020 12 10

திருப்பதி கோவிலில் வரும் 17-ம் தேதி முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்து 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் பாடப்பட்டு சாமியை துயில் எழுப்பப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் திருப்பாவை பாசுரத்துடன் ஏழுமலையானை துதி எழுப்பும் நிகழ்ச்சி நடைபெறும்.  வைணவ திருத்தலங்களில் மார்கழி 1-ம்  தேதி முதல் அம்மாதம் முழுவதும் சுப்ரபாத சேவை ரத்து செய்து ஆண்டாள் திருப்பாவை பாசுரம் பாடியபடி சாமியை துயில் எழுப்பக்கூடிய பூஜைகள் நடைபெறும். 

இந்நிலையில் வருகின்ற 16-ம் தேதி காலை 6.4 மணியளவில் மார்கழி மாதம் தொடங்குவதால் திருப்பதி கோவிலில் வருகிற 17-ம் தேதி முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்து 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் பாடப்பட்டு சாமியை துயில் எழுப்பப்பட உள்ளது.   ஜனவரி 14-ம் தேதி வரை திருப்பாவை சேவை நடைபெறும். மீண்டும் வழக்கம் போல ஜனவரி 15-ம் தேதி முதல் சுப்ரபாத சேவையுடன் ஏழுமலையான் கோவிலில் துயில் எழுப்படும். மார்கழி மாதத்தில் கிருஷ்ணருக்கும் ஏகாந்த சேவை பூஜைகள் செய்யப்படும்.  இவ்வாறு தேவஸ்தானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து