முக்கிய செய்திகள்

இன்று முதல் 2 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி சூறாவளி பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜனவரி 2021      தமிழகம்
Edappadi 2020 11 25

Source: provided

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 6-ம் தேதி மற்றும் நாளை 7-ம் தேதி ஆகிய 2 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த பிரச்சாரத்தின் போது 6 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் பேசுகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த முதல்வர், இன்று முதல் 2 நாட்கள் ஈரோட்டில் பிரச்சாரம் செய்கிறார்.

அதன்படி இன்று 6-ம் தேதி காலை 9 மணியளவில் பவானியில் பொதுக்கூட்டம்.  10 மணிக்கு கே.எம்.பி. மகாலில் சிறு, குறு தொழில் முனைவோருடன் கலந்துரையாடல்.  11 மணிக்கு அந்தியூரில் பொதுக்கூட்டம்.  12 மணிக்கு வாரி மகாலில் வெற்றிலை கொடி விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார். 

அதை தொடர்ந்து  பகல் 1 மணிக்கு அத்தானியில் வரவேற்பு, 1.30 மணிக்கு கள்ளிப்பட்டியில் வரவேற்பு, 3.30 மணிக்கு நால்ரோட்டில் வரவேற்பு. மாலை 4 மணி- சத்தியமங்கலத்தில் எஸ்.பி.எஸ். பெட்ரோல் பங்க் அருகில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 4.45 மணிக்கு நல்லூர் இ.பி.பி. மகாலில் உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடும் முதல்வருக்கு 5.30 மணிக்கு பு.புளியம்பட்டியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

தொடர்ந்து 6.30 மணிக்கு பு.புளியம்பட்டி நகராட்சி காந்தி நகரில் உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடிய பின் இரவு 7 மணிக்கு நம்பியூரில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 9 மணிக்கு கோபிசெட்டி பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

நாளை 7-ம் தேதி காலை 9 மணிக்கு பன்னீர்செல்வம் பார்க்கில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.  தொடர்ந்து 10 மணிக்கு மாரியம்மன் கோவில் வீரப்பன் சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 11.30 மணிக்கு இந்து கல்வி நிலையத்தில் தேனீர் விருந்து நடக்கிறது. அதை தொடர்ந்து 12 மணிக்கு  சித்தோட்டில் வரவேற்பளிக்கப்படுகிறது.

தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு வில்லரசம்பட்டி திவேபேரர் ரிசார்ட்டில் தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார்.  தொடர்ந்து 2.30 மணிக்கு ஊத்துக்குளியில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

தொடர்ந்து 3.15 மணிக்கு சென்னிமலையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.  மாலை 4 மணியளவில் ஒடா நிலையில் பொதுக்கூட்டம் மற்றும் மஞ்சள் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து 4.45 மணிக்கு  அரச்சலூரில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து சிவசக்தி திருமண மண்டபத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் முதல்வர் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெறுகிறது. அதையடுத்து 5.30 மணிக்கு அவல்பூந்துறையில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 6.30 மணிக்கு  பெருந்துறை ஸ்ரீபிளஸ் மகாலில் கைத்தறி மற்றும் சக்தி தறி தொழில் முனைவோர் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார்.

அதை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பெருந்துறையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் சிறப்புரையாற்றுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்தையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து