திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட அனுமதி

வியாழக்கிழமை, 7 ஜனவரி 2021      ஆன்மிகம்
Thiruchanur-Padmavathi-2021

7 மாதங்களுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா பரவலால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஜூன் மாதம் 7-ம் தேதி வரை அனைத்துப் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஜூன் மாதம் 8-ம் தேதியில் இருந்து மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டுதல் படி இலவச தரிசன பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் 7 மாதங்களுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட திருமலை - திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 7.30 மணி வரையிலும் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து