தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      வர்த்தகம்
Gold-price 2020-11-10

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.304 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன் பிறகு விலை குறைந்தாலும் கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. கடந்த வாரம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின்னர் படிப்படியாக குறைந்து வந்தது.

நேற்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.38 குறைந்து ரூ.4,662 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு 90 காசுகள் குறைந்து, ரூ.68.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.68,100 ஆகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து