முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

104-வது பிறந்தநாள் விழா: அ.தி.மு.க தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர்  எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் நேற்று தமிழகம் ழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  நகரம் முதல் கிராமம் வரை ஒவ்வொரு பகுதியிலும் எம்.ஜி.ஆரின் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கட்சி நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினர்.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலை, வளாகம் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. 

கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான  ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இருவரும் காலை 10.15 மணியளவில் தலைமைக் கழகம் வந்தனர்.  அப்போது தொண்டர்கள் வாழ்த்து கோ‌ஷம் எழுப்பினர். அதன் பிறகு அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் இருவரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து அங்கிருந்த கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைத்தனர். அங்கு கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். 

நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், ஆர். காமராஜ், எம்.சி. சம்பத், செல்லூர் கே. ராஜூ, முன்னாள் அமைச்சர்கள் சி. பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பா. வளர்மதி, கோகுல இந்திரா, வைகை செல்வன், சோமசுந்தரம், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்தியால் பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர்கள் தி.நகர் சத்யா, விருகை வி.என்.ரவி, வேளச்சேரி அசோக், ஆர்.எஸ். ராஜேஷ், வெங்கடேஷ்பாபு, பால கங்கா, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் - பரங்கிமலை ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், காரப்பாக்கம் லியோ என்.சுந்தரம், துரைப்பாக்கம் டி.சி.கோ விந்தசாமி, மாணவர் அணி ராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் என்ற சின்னையன், ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயின், நொளம்பூர் இம்மானுவேல், முகப்பேர் இளஞ்செழியன், டாக்டர் சுனில், எஸ்.எஸ்.எஸ்.ராமு, தி.நகர் மின்சாரம் சத்திய நாராயணமூர்த்தி, சைதாப்பேட்டை வக்கீல் பழனி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்  கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து