முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாடுகளை கொன்றால் 7 வருட சிறை: கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இனி மாடுகளை கொன்றால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

கர்நாடக அரசு, பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. மேல்-சபையில் அந்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பசுவதை தடைக்கு அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.   இதற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் இந்த பசுவதை தடை சட்டத்தை இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.

இந்த சட்டத்தின்படி மாடுகளை கொல்ல முடியாது. விவசாயிகள் வயதான மாடுகளை வளர்க்க முடியாவிட்டால் அதை கோசாலைகளில் விட்டு விட வேண்டும். ஆனால் 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளை கொல்ல உரிய முன் அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.

மாட்டிறைச்சி சாப்பிட தடை இல்லை.  இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பசுவதை தடை சட்டத்திற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து