இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      விளையாட்டு
England 2021 01 18

Source: provided

காலே : இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்தது. 

இலங்கை முதல் இன்னிங்சில் 135 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 421 ரன் குவித்தது. இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 359 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 74 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து  4-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்து இருந்தது. 

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 36 ரன் தேவை. கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது. 

அந்த அணி 24.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 22-ந் தேதி காலேயில் தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து