பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் 29-ம் தேதி தொடக்கம் : கேள்விநேரத்திற்கு அனுமதி: ஓம் பிர்லா

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021      இந்தியா
Om-Birla 2021 01 19

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்கப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். 

இந்த ஆண்டின் முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி, வரும் 29-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.  வரும் 29-ம் தேதி காலை 9 மணிமுதல் 2 மணி வரை மாநிலங்களவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தொடரில் கேள்விநேரம் மற்றும் பூஜ்ஜியம் நேர விவாதத்திற்கு (ஜீரோ ஹவர்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டத்தொடரில் பங்கேற்றுகும் எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். 

மேலும், பாராளுமன்ற கேன்டினில் நடைமுறையில் இருந்து வந்த உணவு மானியம் முற்றிலும் நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.  பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவசாயிகள் போராட்டம், கொரோனா தடுப்பூசி மீதான சந்தேகம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து