முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நிலை மோசம்: லல்லு பிரசாத் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ராஞ்சி : ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிகாா் முன்னாள் முதல்வரும், ஆா்.ஜே.டி. கட்சித் தலைவருமான லல்லு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

ராஷ்ட்ரீய ஜனதாதளம் (ஆா்.ஜே.டி) கட்சியின் தலைவா் லல்லு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி சிறையில் இருந்து வந்தாா்.

உடல்நலக் குறைவு காரணமாக, அவா் ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  கடந்த ஆண்டு அவருக்கு கொரோனா தொற்று பாதித்து அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், உயர் சிகிச்சைக்காக டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து