சென்னை - சேலம் புறநகர் மாவட்ட தெடாவூர் பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் மறைவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சேலம் புறநகர் மாவட்டம் தெடாவூர் பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் நா. ஆசைதம்பி உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். கட்சியின் மீதும், கட்சி தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு கட்சி பணிகளை சிறந்த முறையில் ஆற்றி வந்த ஆரம்ப கால கட்சியின் உடன்பிறப்பு ஆசைதம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.