முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வருகிற 31-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

வியாழக்கிழமை, 28 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகம் முழுவதும் வருகிற 31-ம் தேதி, 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற 31-ம் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் கடந்த 17-ம் தேதி நடைபெற இருந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி காரணமாக, போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 31-ம்  தேதி, 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், அன்றைய தினம் பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக, பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களிலும் இந்த முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் உள்ள 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து