நானும் எனது மகனும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை: நடிகர் பிரபு சொல்கிறார்

புதன்கிழமை, 10 பெப்ரவரி 2021      சினிமா
Prabhu 2021 02 10

Source: provided

சென்னை : நானோ என் மகன் விக்ரம் பிரபுவோ எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்று நடிகர் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் பா.ஜ.க வில் இணைய இருப்பதாக தகவல் பரவியது. இது குறித்து ராம்குமாரின் தம்பியும் நடிகருமான பிரபுவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:- 

அண்ணன் கடந்த 2, 3 ஆண்டுகளாகவே பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த பற்று கொண்டு ஆதரவாளராகவே இருக்கிறார். அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம்.

அண்ணனின் அரசியல் பயணத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நானோ என் மகன் விக்ரம் பிரபுவோ எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்பதையும் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து