ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள்: திருமங்கலம் அம்மா கோவிலில் அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் 501 புதிய பானையில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு: பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது

புதன்கிழமை, 24 பெப்ரவரி 2021      தமிழகம்
RB 2021 02 24

Source: provided

மதுரை : ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் அம்மா கோவிலில்  அம்மா பேரவையின் சார்பில் அமைச்சர்ஆர் பி உதயகுமார் ஏற்பாட்டில் 501 பெண்கள் புதிய பானையில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள டி குண்ணாத்தூரில் உள்ள அம்மா திருகோவிலில் புரட்சி தலைவி அம்மாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஏற்பாட்டில் அதிகாலை 6 மணிக்கு 501 பெண்கள் புதிய பானைகளில் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபடும் வகையில் குலவையிட்டு பொங்கல் வைத்து அம்மாவின் திருவுருவ சிலைக்கு முன் படைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேள்வி செய்து திருஉருவசிலைக்கு சிறப்பு அபிஷேக செய்தனர்.  அம்மா சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்து,நலத்திட்ட உதவிகளை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, வெற்றிவேல் அன்பழகன், ராமசாமி ,மகாலிங்கம், ரவிச்சந்திரன் , ராமகிருஷ்ணன் , தமிழ்ச்செல்வன், பிச்சைராஜன், தமிழழகன்,தமிழ்ச்செல்வன், சிங்கராஜா பாண்டியன் லட்சுமி, மகேந்திர பாண்டி ,முருகேசன், நெடுமாறன், பாலசுப்ரமணி,டாக்டர் பாலமுருகன், உரப்பனூர் சாமிநாதன் உட்பட பலர் கலந்து உண்டனர். 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: 

அம்மாவின் 73-வது அவதார திருநாளை முன்னிட்டு அம்மாவின் தியாகத்தையும் உலகுக்கு எடுத்துச் செல்லும் வகையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் ஆணைக்கிணங்க அம்மாவிற்கு பொங்கல் வைத்து சிறப்பாக நடைபெற்றுள்ளது தென்தமிழகத்தின் எல்லைச்சாமியாக அம்மா கோவில் திகழும்.  குடிசையில் வாழும் ஏழை எளிய சாமானியனின் குரலை கோட்டையில் ஒலிக்கச் செய்து பேரறிஞர் அண்ணாவின் இலக்கனத்திற்கு உயிர் கொடுத்தவர்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆவார்கள்.  வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் என்றைக்கும் மக்கள் மனதில் என்றைக்கும் தெய்வமாக அம்மா வாழ்ந்து வருகிறார்.  ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையும் மக்களின் தலையெழுத்தை மாற்றி வாழ்வில் ஏற்றம் பெற வைக்கும் உள்ளது.  கடந்த பத்தாண்டுகளில் வரியில்லாத பட்ஜெட் அதை இந்த பட்ஜெட்டில் இருக்கிறது என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.  பல்வேறு துறைகளில் முதல் இடத்தில் இருக்கும் அம்மாவின் அரசு உள்ளது

அதேபோல் . தமிழக அரசு நிதி மேலாண்மை முதலிடத்தில் உள்ளது அதே போல் கடன் சுமையும் கட்டுக்குள் உள்ளது ஆனால் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.  கடந்த 5 ஆண்டுகளில் 17 ,000 கோடிக்கு மேல் பயிர் ரத்து செய்யப்பட்டுள்ளது இதில் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்றனர்.  அம்மா 100 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கினார் அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் கடந்த ஆண்டு 1,000 ரூபாய் வழங்கினார் தற்போது 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கியுள்ளார்.  அதேபோர் பேரிடர் காலங்களில் விவசாய மக்களுக்காக சில விதியை தளர்த்தி மானாவாரி ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவியும், நீண்டகால பயிர்களுக்கு ஒரு ஏக்கர் 25,000 ரூபாய் உதவியும் முதலமைச்சர் வழங்கியுள்ளார்.  அதேபோல் முதலமைச்சர் காவிரி குண்டாறு திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளார்

இதன் மூலம் ராமநாதபுரம்,விருதுநகர்,மதுரை உள்ளிட்ட வறண்ட வானம் பார்த்த பூமியை இனிமேல் வளம் கொழிக்கும் மாவட்டமாக மாறும்.  வைரஸ் காலகட்டங்களில் மொத்தம் 4,500 ரூபாய் மக்களின் வாழ்வாதார பிரச்சனைக்காக வழங்கியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நீர் மேலாண்மையில் முதலிடத்தை பிடித்து இருக்கிறோம்.  தேர்தல் வந்த உடன் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் என்று கனவு காணலாம் ஆனால் அதற்கான ஒரு தகுதி வேண்டும் 4 ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்பாக காணவேண்டிய வளர்ச்சிகளை இந்த நான்காண்டுகளில் தற்சமயம் செய்து முடித்துள்ளார்

தமிழகத்தின் முதலமைச்சர்  110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளை 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம்,தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம் அமைச்சர்கள் மானிய கோரிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.  மக்கள் மனதில் நம்பிக்கையும் செல்வாக்கும் உடையவராக மாறிவிட்டார் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 2,110 கோடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்கிறேன் என்று ஆளுநர் உரையில் தெரிவித்துள்ளார் முதலமைச்சர். 

பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னால் ரத்து செய்து விவசாயிகளுக்கு அந்த ஒப்பந்த பத்திரத்தை கொடுத்திருக்கிறார் இதன் மூலம் மின்னல் வேக செயல்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என்று மக்கள் கூறுகின்றனர்.  மனதில் ஈரம் இல்லாமல் ஸ்டாலின் பேசி வருகிறார் முதலமைச்சர் திட்டங்களுக்கு ஸ்டாலின் பாராட்டு விழா நடத்த வேண்டாம் ஆனால் கொச்சைப்படுத்த வேண்டாம். ஆட்சி அதிகார பசியோடு தற்சமயம் களத்தில் நின்று கொண்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கலைஞர் இருந்த பொழுது முதலமைச்சராக ஆகிவிட வேண்டும் என்று நினைத்தார் அதை கலைஞரும் விரும்பவில்லை மக்களும் விரும்பவில்லை ஜாதகமும் விரும்பவில்லை. 2021 தமிழகத்தின் முதலமைச்சர் ஆக மாறிவிடலாம் என்று மு க ஸ்டாலின் நினைக்கிறார்

ஆனால் அப்போது மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் அதனால் எப்போதும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது. முதலமைச்சருக்கு மந்திரவாதி என்று பெயர் சூட்டியுள்ளார் ஸ்டாலின் முதலமைச்சருக்கு மந்திரமும், தந்திரமும் தெரியாது ஆனால் மக்களின் தேவை அறிந்து உழைக்க தெரியும்.  ஒவ்வொரு பகுதியாக செல்கிறார் ஸ்டாலின் அவர் சொல்கிற இடத்தில் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து வருகிறார் ஆனால் தமிழகத்தின் முதலமைச்சர் பொதுமக்களை சந்தித்து வருகிறார்.  2021 தேர்தலுக்கு பிறகு திமுக அழிந்து விடும் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை தகுதி வாய்ந்த தலைவர் திமுகவில் இல்லை. தடுமாறும் தலைவர் இருக்கிறார் ஆனால் தற்சமயம் நமக்கு உள்ள தலைவர்கள் நிரந்தரமான எளிமையான தலைவர் என்பதில் மாற்றமில்லை எனத் தெரிவித்தார். 

கொங்கு நாடு, சோழநாடு கழகத்திற்கு வெற்றிக்கொடி நாட்டி வருவதைப்போல் பாண்டிய நாடும் வெற்றிக்கொடி நாட்டி முதலிடத்தை பிடிக்கும் என்பது சாத்தியமாகும்.  மதுரை மாவட்டம் புறநகர் மேற்கு தொகுதியில் முழுநேர அரசு ஊழியர்கள் என்பது போல முழு நேர அரசியல் ஊழியர்கள் என்பது தேர்ந்தெடுக்கப்படுவார்கள். குறைந்தபட்ச ஊதியம் என்கிற அடிப்படையில் அவர்களது வாழ்வாதாரமான ஊதியம் வழங்கப்படும் என்பதில் மாற்றமில்லை.  இந்த இயக்கத்தில் நீண்ட நாட்கள் உழைத்துக் கொண்டிருக்கிற தகுதியானவர்களுக்கு இந்த அரசியல் ஊதியம் வழங்கப்படும்.  32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டு இயக்கமே மறுபடியும் ஆண்ட வரலாற்றை புரட்சித்தலைவி அம்மா உருவாக்கினார் அதேபோல் மீண்டும் ஒரு வரலாற்றை நாம் பார்க்க போகிறோம் புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தைத் தொடங்கியபோது திமுக என்ற தீய சக்தியை நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார் வரும் தேர்தலில் திமுகவை அப்புறப்படுத்தினோம் என்ற வரலாற்றை நாம் உருவாக்க வேண்டும்.  இன்றைக்கு திமுக அழிவின் விளிம்பில் உள்ளது மேலும் இந்த தேர்தலில் பல குறுக்கு வழியில் செயல்படுவார்கள்

ஆகவே நீங்கள் அனைவரும் திமுகவின் சதிகளை முறியடிக்க வேண்டும் அது மட்டுமல்லாது கழக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கழக அரசின் சாதனைகள் எடுத்துச் சொல்லி மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் கழத்திற்கு மாபெரும் வெற்றி பெற ஒரு பகல் பாராது அயராது பாடுபடுவோம் என்று அம்மாவின் கோயில் முன் அனைவரும் சூளுரை ஏற்கவேண்டும் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து