பிரபல கோல்ப் வீரர் கார் விபத்தில் படுகாயம்

புதன்கிழமை, 24 பெப்ரவரி 2021      விளையாட்டு
Tiger-Woods 2021 02 24

Source: provided

நியூயார்க் : பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் விபத்தில் படுகாயம் அடைந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ். கோல்ப் விளையாட்டில் 15 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், டைகர் உட்ஸ்  சென்ற காரில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் டைகர் உட்ஸ் பலத்த காயம் அடைந்துள்ளார்.

டைகர் உட்ஸின் இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து