முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க, விருப்பத்திற்கேற்ப தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன : மம்தா

சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்கத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மம்தா, பா.ஜ.க, விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்க சட்டசபைக்கான தேர்தல்கள் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. கடந்த முறை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மார்ச் 27 அன்று 30 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது.

இறுதியாக ஏப்ரல் 29 அன்று 35 தொகுதிகளுக்கு 8-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளனர். 2 தேர்தல் பார்வையாளர்களை ஆணையம் நியமித்துள்ளது. தேவைப்பட்டால் 3-வது அதிகாரியும் அனுப்பப்படுவார் என கூறியுள்ளது.

இது பற்றி தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து மம்தா கூறியதாவது:

மற்ற மாநிலங்களில் ஒரே நாளில் வாக்களிக்கிறார்கள். மேற்கு வங்கத்திற்கு மட்டும் 8 கட்டங்களாக தேர்தல் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் மாவட்டங்களை பிரிப்பது ஏன். தெற்கு 24 பர்கானாக்கள் எங்கள் கோட்டையாகும். அங்கு 3 வெவ்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளனர். எனக்கு கிடைத்த தகவலின் படி பா.ஜ.க,விலுள்ள ஒருவர் விரும்பியதற்கு ஏற்பவே தேதிகள் உள்ளன.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஆலோசனைகளின்படி தான் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதா? பிரதமரும், உள்துறை அமைச்சரும் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது.

பின்னர், அவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஏஜென்சிகள் வழியாக அனைத்து மாவட்டங்களுக்கும் பா.ஜ.க, பணத்தை அனுப்பியுள்ளது. நான் வங்கத்து மகள். பா.ஜ.க,வை விட நான் இந்த மாநிலத்தை நன்கறிவேன். எட்டு கட்டங்களில் கூட வெற்றி பெறுவேன். என ஆவேசமாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து