முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.ராக்கெட் : இளம் விஞ்ஞானிகளுக்கு ஓ.பி.எஸ். பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் 'அமேசோனியா - 1' செயற்கைக் கோள் ஏவப்பட்டது. 

இந்த ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 செயற்கைக் கோள், இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 19 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. 

தற்போது பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்களும் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. தற்போது அனைத்து செயற்கைக் கோள்களும் சூரிய ஒத்திசைவு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. 

இந்நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் இதில் கூடுதல் சிறப்பம்சமாக 19 செயற்கை கோள்களில் தமிழகத்தின் சில பொறியியல் கல்லூரி மாணவர்களின் செயற்கை கோள்களும் இடம்பெற்றுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இளம் விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து