முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சகோதரர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

திங்கட்கிழமை, 8 மார்ச் 2021      தமிழகம்
Edappadi 2020 11 18

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் சகோதரர் முகமது முத்து மீரான் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் ராமேசுவரத்தில் பிறந்தவர். அப்துல் கலாமுக்கு முகமது முத்துமீரான் லெப்பைமரைக்காயர் என்ற ஒரு மூத்த சகோதரர் உண்டு. ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள வீட்டில் தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் அவர் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த முகமது முத்துமீரான் லெப்பைமரைக்காயர் நேற்று முன்தினம் இரவு திடீரென இறந்தார். அவருக்கு வயது 104. 

இந்நிலையில் அப்துல்கலாமின் சகோதரர் முகமது முத்து மீரான் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் (07.03.2021) அன்று காலமான செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து