மகளிர் சுய உதவி குழு மூலம் தயாரித்த பொருட்களை வாங்கிய பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 8 மார்ச் 2021      இந்தியா
Modi 2021 03 01

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள், காதி பொருட்களை வாங்கியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.  

இந்நிலையில், பெண்கள் தினத்தினத்தையொட்டி பிரதமர் மோடி பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் பழங்குடியின மக்கள் மற்றும் பல்வேறு தரப்பு பெண்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள், காதி பொருட்களை வாங்கியுள்ளார்.  நாரிசக்தி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டு ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வரும் சில பொருட்களை பிரதமர் மோடி வாங்கியுள்ளார். தான் வாங்கியுள்ள பொருட்கள் எவை என்பது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பொருட்களின் விவரங்களை பகிர்ந்துள்ளார். அவற்றில் கைவினை பொருட்களால் உருவாக்கப்பட்ட காகித ஓவியம், சால்வை, துண்டு உள்ளிட்டவை அடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து