தங்கம் விலை சவரனுக்கு ரூ. 256 உயர்வு

Gold-price 2020-11-10

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு சவரன் ரூ.33,912-க்கு விற்பனையானது. 

தங்கம் விலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து குறைவு காணப்பட்டதால் பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஆனால் இந்த வார தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்றுமுன்தினம் பவுன் ரூ.33 ஆயிரத்து 656-க்கு விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று மேலும் உயர்ந்து பவுன் ரூ.34 ஆயிரத்தை தொட்டது. சென்னையில் நேற்று  காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33 ஆயிரத்து 912-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 239 ஆக இருந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71 ஆயிரத்து 700 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.70-க்கு விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து