முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் வெளுத்து வாங்கும் மழை 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு

திங்கட்கிழமை, 22 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். 

வேகமாகப் பாய்ந்த வெள்ள நீர் பெரிய அளவில் சேதத்தை உண்டாக்கியதால் சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் வாழும் மக்கள், நள்ளிரவில், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டியிருந்தது. வெள்ளப்பெருக்கினால் பல முக்கியமான சாலைகள் மூடப்பட்டன. ஏராளமான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூ சவுத் வேல்ஸின் சுமார் 13 பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டது. அங்கிருந்து மக்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். 

எதிர்பார்த்ததை விட அதிகமான மழை பெய்ததாகவும், இதனால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாகவும் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறி உள்ளார். சிட்னியின் வடமேற்கின் சில பகுதிகளில் உள்ள மக்கள் நள்ளிரவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து இன்னும் 4,000 பேர் வெளியேற்றப்படலாம் என்றும் பெரெஜிக்லியன் கூறினார். 

தொடர் மழை காரணமாக, சிட்னியின் பிரதான நீர்வழங்கல் அணையான வார்ரகாம்பா உட்பட பல அணைகள் நிரம்பியதால், தண்ணீர் திறக்கப்பட்டு, ஆறுகளில் நீர்மட்டம் திடீரென அதிகரித்தது. கொந்தளிப்பான வானிலை காரணமாக, நியூ சவுத் வேல்சில் கொரோனா தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து