முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து பல்கலையில் கிரெட்டா துன்பெர்க் சிலை

புதன்கிழமை, 31 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

இங்கிலாந்தின் வின்சஸ்டர் பல்கலைக்கழகம் தங்களது வளாகத்தில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கிற்கு சிலை நிறுவி உள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் கடந்த 2019 ம் ஆண்டு ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் தலைவர்களிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவர் உலகம் முழுவதும் பிரபலமானார். அத்துடன் பல்வேறு தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில் இங்கிலாந்தின் வின்சஸ்டர் பல்கலைக்கழகம் கிரெட்டா துன்பெர்க்கின் சிலையை தங்களது வளாகத்தில் நிறுவியுள்ளது. இதன் மதிப்பு தோராயமாக இந்திய ரூபாயில் ரூ.24 லட்சமாகும்.

இதுகுறித்து பல்கலைக்கழக முதல்வர் மெகான் பால் கூறும்போது, கிரெட்டா துன்பெர்க் அனைவரும் அறிந்த சுற்றுச் சூழல் ஆர்வலர். இவர் உலக அளவில் பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பி, அதற்கான தீர்வை அளிக்க உதவியுள்ளார். இவரின் உருவச் சிலையைப் பலகலைக்கழக வளாகத்தில் நிறுவியது மாணவர்கள் மத்தியில் புது உத்வேகத்தைக் கொடுக்கும். இதற்காக மாணவர்கள் மத்தியில் எந்த வித நிதியும் வசூலிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து