முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் 1.5 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வீணானது

வியாழக்கிழமை, 1 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

அமெரிக்காவில் 1.5 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த ஒற்றை-ஷாட் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் சுமார் 1.5 கோடி  டோஸ் அமெரிக்காவில் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட சிறிய தவறால் வீணானதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பால்டிமோரரில் உள்ள  அவசர பயோ சொல்யூஷன்ஸ் மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் இது நடந்துள்ளது.  மருந்தில் கலக்கப்படவேண்டிய ஒரு முக்கிய மூலப்பொருளின் அளவில் சற்று மாற்றம் ஏற்பட்டதால், அதன் தரத்தை அது பூர்த்தி செய்யவில்லை என்றும், அந்த குறிப்பிட்ட அளவு மருந்துகளை மட்டும் நிரப்பப்படுவதற்கு முன்னரே தடை செய்து விட்டதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தடுப்பூசியின் அனைத்து உற்பத்தியையும் மேற்பார்வையிடவும், உறபத்தியைஆதரிக்கவும், பால்டிமோருக்கு அதிக நிபுணர்களை அனுப்புவதாக ஜான்சன் அண்ட்  ஜான்சன் நிறுவனம் கூறியுள்ளது.மேலும், இழப்பை ஈடுகட்ட ஏப்ரல் மாதத்தில் கூடுதலாக 2.4 கோடி டோஸ்களை உற்பத்தி செய்யவுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போல், 2021-ம் ஆண்டின் இறுதிக்குள் 100 கோடிக்கும்  அதிகமான டோஸ்களை வழங்க ஜான்சன் அண்ட் ஜான்சன் திட்டமிட்டுள்ளது. ஜான்சன் அண்ட்  ஜான்சன் தடுப்பூசி அதன் ஒரே ஷாட் கொரோனா தடுப்பூசிக்காக பெரிதும் பாராட்டப்படுகிறது. மேலும் மாடர்னா மற்றும் பைசரின் தடுப்பூசிகளைப் போல், இதனை உறையவைக்கத் தேவையில்லை.  இது விநியோகத்தை மிகவும் எளிதாக்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து