முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் அஸ்ட்ரா செனகாவின் தடுப்பூசி செலுத்திய 7 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 4 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரா செனகா நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கின.

இந்த தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு அவசர கால அனுமதி வழங்கியதை அடுத்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.

அதேபோல் அஸ்ட்ரா செனாவின் தடுப்பு மருந்து ஐரோப்பிய நாடுகளிலும் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா செனகாவின் தடுப்பு மருந்தை செலுத்தி கொண்ட சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதில் ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த தடுப்பூசிக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகமாக தடை விதித்தன. அதன் பின்னர் தடுப்பு மருந்துக்கும், ரத்த உறைவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அதற்கான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை என்றும் அஸ்ட்ரா செனகா நிறுவனம், உலக சுகாதார அமைப்பு ஆகியவை தெரிவித்தன.

இந்த நிலையில், இங்கிலாந்தில் அஸ்ட்ரா செனகாவின் தடுப்பு மருந்தை செலுத்தி கொண்ட 30 பேருக்கு ரத்த உறைவு ஏற்பட்டு உள்ளது என்றும் இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் ரத்தம் கட்டியதால் 7 பேர் உயிரிழந்ததை அடுத்து பல்வேறு நாடுகள் தங்களின் அஸ்ட்ரா செனகா மருந்து ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து