முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் நேற்று  காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 176 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 96-க்கு விற்பனையானது.

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே குறைந்தபடி உள்ளது. இதனால் பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. கடந்த மாதம் தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வந்தது. இதற்கிடையே இந்த மாத தொடக்கத்தில் இருந்தே விலை உயர்ந்தபடியே இருந்தது. கடந்த 2-ம் தேதி தங்கம் பவுன் மீண்டும் ரூ.34 ஆயிரத்தை தாண்டியது. தொடர்ந்து விலை உயர்ந்தபடியே இருந்தது. 

இந்தநிலையில் நேற்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் நேற்று  காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 176 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 96-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 387 ஆக இருந்தது.  தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.72 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.  கடந்த 5 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.1032 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளது.  இதையடுத்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து