முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நீட் தேர்வை கைவிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் நடத்த கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, நீட் தேர்வை கைவிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம்  தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

நீட் தேர்வை ஏற்க முடியாது, நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை. நீட் தேர்வு குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே அமல்படுத்தி வரும் இடஒதுக்கீடு முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும். பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான 2021-ம் ஆண்டு நீட் தேர்வு, ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து