முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு  உத்தரவு பிறப்பித்தது.

அதில்,  மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டு உள்ளதால், இதற்கான தடை தொடரும்.  தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றிஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 

நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள்மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சில செயல்பாடுகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. 

முக கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக்கூடாது. ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும்.  நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பஸ் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் அனைத்து ஷோ ரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும், இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 50 சதவீத இருக்கைகளில் மட்டும், வாடிக்கையாளர்கள் இரவு 11 மணி வரை உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

மேலும், உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து