முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்வது ஒரு சமூக சேவை: புதுவை கவர்னர் தமிழிசை பேச்சு

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வது ஒரு சமூக சேவை, குடும்ப சேவை என புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் வங்கி ஊழியர்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகப் பணியாளர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம் நமக்கும், குடும்பத்தினருக்கும், நம்மால் மற்றவருக்கும் நோய் வராமல் பாதுகாத்துக் கொள்கிறோம். தடுப்பூசி எடுத்துக்கொள்வது ஒரு சமூக சேவை, குடும்ப சேவை. தடுப்பூசி எடுத்துக் கொண்டால், அலர்ஜி, மயக்கம் வரும் எனக் கருதி பலர் நமக்கு இருக்கிற வாய்ப்பை நழுவ விட்டு விடுகின்றனர்.  உலகம் முழுவதும் நம்முடைய தடுப்பூசிக்காகக் காத்திருக்கிறார்கள். தடுப்பூசி கிடைக்காமல் நாம் திண்டாடக் கூடாது என்பதற்காகத்தான் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தற்போது 18 வயதினருக்கும், இளைஞர்களுக்கும் ஏன் தடுப்பூசி கொடுக்கவில்லை என்று கேட்கின்றனர். யார் அதிகம் பாதிக்கப்படுவார்களோ அவர்களுக்குத் தடுப்பூசி கொடுக்கிறோம்.

இளைஞர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இளைஞர்களுக்குத் தொற்று வந்தால் பாதிப்பு குறைவாகவே இருக்கும். வயதானவர்களுக்கு வந்தால் உயிரைப் பாதுகாப்பது சில நேரங்களில் பெரிய பிரச்சினையாகி விடும்.  தொற்றுள்ள ஒருவர் முகக்கவசம் போடாமல் சென்றால், அவர் 46 பேருக்குத் தொற்றைப் பரப்புவார். ஆகவே, முகக்கவசம் போடுவது நமக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பாதுகாப்பதற்குத்தான். இது நம்முடைய சமூகக் கடமை. 

அபாயகரமான கட்டத்தில் நாம் இருக்கிறோம். நாம் எச்சரிக்கையாக இருக்கவில்லை என்றால் பழைய நிலைக்கு வந்து விடுவோம். அந்த நிலைக்கு நாம் வந்து விடக் கூடாது. இதற்காக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 100 இடங்களில் தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படவுள்ளது. எனவே, அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு தமிழிசை பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து