முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      ஆன்மிகம்
Image Unavailable

கோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டு உள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: 

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு கடந்த 10-ம் தேதி முதல் தடை விதிக்கப்ப்பட்டுள்ளது. கோயில்களில், பொது மக்கள் வழிபாடு இரவு 8:00 மணி வரை அனுமதிக்கப்படும். எனினும் கோயில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோயில் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. 

கோயிலில் நடக்கும் திருமணங்களில் 10 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் அதற்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும். 50 நபர்களுக்கு மட்டும் அனுமதித்து, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து