முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: விராட்கோலி 2-வது இடத்துக்கு சறுக்கல்

புதன்கிழமை, 14 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடத்தை 8 புள்ளிகளில் இழந்து 2-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பிடித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம். கோலியை 8 புள்ளிகள் கூடுதலாக பெற்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார் பாபர். கோலி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். 1258 நாட்களாக விராட் கோலி முதலிடத்தை தக்க வைத்திருந்தார்.

அவரை தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான ரோகித் ஷர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் ஃபக்கர் ஜாமன் 778 புள்ளிகளை பெற்று தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறி எட்டாவது இடம் பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்தின் போல்ட்டும், ஆல்  ரவுண்டர்களில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசனும் உள்ளனர். 

பாகிஸ்தான் அணி அண்மையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து