முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் கோபத்தை வெளிப்படுத்திய கோலி மீது நடுவர்கள் புகார்

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் கோபத்தை வெளிப்படுத்திய ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி மீது ஐ.பி.எல் விதிமுறைகளை மீறியுள்ளதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். 

சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்த வருடப் போட்டியில் பெங்களூர் அணி, தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. 

முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு விளையாடிய சன்ரைசர்ஸ் அணி, கடைசிக்கட்டத்தில் தடுமாறியதால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டும் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பெங்களூர் அணி விளையாடியபோது ஆர்.சி.பி அணி கேப்டன் விராட் கோலி 33 ரன்களில் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் கோபமடைந்த விராட் கோலி எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்றபிறகு ஆத்திரத்தில் மைதானத்தில் இருந்த பிளாஸ்டிக் சேரை தனது பேட்டால் கீழே தள்ளிவிட்டுச் சென்றார்.

இதையடுத்து கோலியின் இந்தச் செயல் ஐ.பி.எல் விதிமுறைகளை மீறியுள்ளதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளார்கள். அவர் மீது லெவல் 1 விதிமுறை 2.2ஐ மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லெவல் 1 விதிமுறை கிரிக்கெட்  உபகரணங்கள், உடைகள் ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்வது  தொடர்பானது. நடத்தை விதிகளை மீறியதைத் தொடர்ந்து கோலி போட்டி நடுவர் வெங்கல் நாராயண் குட்டியால் கண்டிக்கப்பட்டார். தற்போது தனது தவறை கோலி ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து  கோலி மீது போட்டியின் நடுவர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து