முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். தொடர் 6-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூரு 'திரில்' வெற்றி

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த பெங்களூர் அணியின் இன்னிங்ûஸ கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் தொடங்கினர். புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார் கோலி. ஆனால் இந்த ஜோடி நிலைக்கவில்லை. புவனேஸ்வர் குமார் வீசிய 3-வது ஓவரில்  நதீமிடம் கேட்ச் ஆனார் படிக்கல். அவர் 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களம்புகுந்த ஷாபாஸ் அஹமது 10 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பிறகு கேப்டன் கோலியுடன் இணைந்தார் கிளன் மேக்ஸ்வெல். இந்த ஜோடி சற்று நிதானமாக ஆட, பெங்களூரின் ரன் வேகம் குறைந்தது. இதனால் முதல் 10 ஓவர்களில் 63 ரன்களே எடுத்திருந்தது பெங்களூர். 

நதீம் வீசிய 11-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் மேக்ஸ்வெல் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாச, பெங்களூரின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. அந்த அணி 12.1 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்திருந்தபோது கோலியின் விக்கெட்டை இழந்தது. அவர் 29 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்த நிலையில், ஹோல்டர் பந்துவீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் ஆனார்.

பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 1, வாஷிங்டன் சுந்தர் 8, டேன் கிறிஸ்டியான் 1, கைல் ஜேமிசன் 12 ரன்களில் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுபுறம் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 38 பந்துகளில் அரை சதம் கண்டார். அவர் 41 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்து கடைசிப் பந்தில் ஆட்டமிழக்க, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. ஐதராபாத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் ஆடிய ஐதராபாத் அணியில் ரித்திமான் சாஹா 1 ரன்னில் வெளியேற, கேப்டன் டேவிட் வார்னருடன் இணைந்தார் மணீஷ் பாண்டே. இந்த ஜோடி வேகமாக ரன் சேர்க்க, ஹைதராபாதின் ஸ்கோர் உயர்ந்தது. 31 பந்துகளில் அரை சதம் கண்ட வார்னர், 37 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு வந்த ஜானி பேர்ஸ்டோ 12 ரன்களில் வெளியேற, மணீஷ் பாண்டே 39 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு அப்துல் ஸமாத் டக் அவுட்டாக, கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இதனிடையே விஜய் சங்கர் 3, ஜேசன் ஹோல்டர் 4 ரன்களில் வெளியேற, ஹைதராபாதின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அந்த ஓவரை வீசிய ஹர்ஷால் படேல் நோபாலை வீச, அதில் ரஷித்கான் பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. எனினும் அடுத்த பந்தில் ரஷித்கான் (17 ரன்கள்) ரன் அவுட்டாக, 5-ஆவது பந்தில் நதீம் டக் அவுட்டானார். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து ஐதராபாத் அணி தோல்வி கண்டது . 

பெங்களூர் தரப்பில் ஷாபாஸ் அஹமது 2 ஓவர்களில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

4 வருடங்களுக்கு பிறகு....

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் 100 மீட்டருக்கு ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை விளாசி தனது மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஐதராபாத் பந்துவீச்சில் ஆர்.சி.பி வீரர்கள் ஒரு பக்கம் விக்கெட்டுகளை பறிக்கொடுக்க மேக்ஸ்வெல் தனிஆளாக போராடினார். கடைசி பந்துவரை களத்தில் இருந்த மேக்ஸ்வெல் 59 ரன்கள் விளாசினார். இந்த ஐ.பி.எல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். 

2016 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அரைசதம் அடித்துள்ளார். 4 வருடங்களுக்கு பிறகு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் அரைசதம் விளாசியுள்ளார். 2019-ம் ஆண்டு மேக்ஸ்வெல் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடவில்லை. அதுமட்டும் இல்லை போன வருடம் ஐ.பி.எல் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸரை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேக்ஸ்வெல்லுக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டம் என்றால் அது 2014-ம் ஆண்டு தான். அந்த சீசனில் தான் 552 ரன்களை விளாசினார். அதிகப்பட்சமாக 95 ரன்களை விளாசியிருந்தார்.

நிறைவேறிய கோலியின் விருப்பம்

போட்டிக்கு பின் பேசிய மேக்ஸ்வெல், கோலியும், நானும் எப்போதாவது மெசேஜ் செய்வோம். உரையாடலின் போது ஆர்.சி.பி அணிக்காக விளையாடுவது குறித்து என்னிடம் பேசினார். ஆர்.சி.பி அணியில் உங்களை சேர்க்க விரும்புகிறோம் என்றார்.  ஐ.பி.எல் ஆக்‌ஷன் நடந்தபோது மேக்ஸ்வெல் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்துள்ளார். அவருடன் ஆடம் சாம்பா இருந்துள்ளார். ஆர்.பி.சி அணிக்காக ஏலம் எடுத்த தகவல் மேக்ஸ்வெல்லுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆடம் சாம்பா ஏற்கெனவே ஆர்.சி.பி அணிக்காகத்தான் விளையாடி வருகிறார். தன்னிடம் இருந்த ஆர்.சி.பி தொப்பியை எடுத்து மேக்ஸ்வெல்லுக்கு அணிவித்துள்ளார். அதோடு நிற்காமல் அதனை புகைப்படமாக எடுத்து நான் தான் முதலில் மேக்ஸ்வெல்லை ஆர்.சி.பிக்காக வரவேற்றுள்ளேன் என கோலிக்கு டெக்ஸ்ட் பண்ணியுள்ளார். இதற்கு ரிப்ளே அளித்த கோலி முட்டாள்கள்.. இருந்தாலும் இந்த வழி நன்றாகத்தான் இருக்கிறது” எனக் கமெண்ட் செய்துள்ளார். ஏனென்றால் மேக்ஸ்வெல்லை முதன்முதலில் அணியில் சேர்க்க விரும்பியதே கோலிதான் என்று அவருக்கு தெரியாது.

நம்பிக்கை இழக்காத கோலி

வெற்றிக்கு பின் பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், நாங்கள் பெருமைப்படுவது போல் ஆடாவிட்டாலும் இது எங்களுக்கு  ஒரு சிறந்த விளையாட்டாக இருந்தது. ரன் எடுக்க சவாலாக இருந்தது. இதனை மும்பை-கே.கே.ஆர் போட்டியின் போது பார்த்தோம். நாங்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்கவில்லை. நடுத்தர ஓவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. 

149 ரன்கள் எடுத்தாலும் சேசிங்கில் ரன் எடுக்க கடினமாக இருக்கும் என்பதால் வெல்ல முடியும் என சொன்னேன்.  தொடக்கத்தில் நாங்கள் அதிக ரன் அடிக்காவிட்டாலும் மேக்ஸ்வெல் சிறப்பாக ஆடினார்.  அவரின் இன்னிங்ஸ் எங்களுக்கு வித்தியாசம் என்று நினைக்கிறேன். உண்மையாக சொல்வதென்றால் இந்த வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை, என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து