முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிமாநில தொழிலாளர்களுக்காக 230 கோடை கால சிறப்பு ரயில்கள் : மத்திய ரயில்வே அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : வெளிமாநில தொழிலாளர்களுக்காக 230 கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அறிவித்து உள்ளது.

மராட்டியத்தில் கொரோனா தொற்று காட்டுத் தீ போல பரவி வருகிறது. எனவே நோய் பரவலை கட்டுப்படுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து வட இந்திய பகுதிகளை சேர்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக மத்திய ரயில்வே வடக்கு, கிழக்கு இந்திய பகுதிகளுக்கு 230 கோடை கால சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது.  இதுகுறித்து மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் கூறியதாவது:-

வழக்கமான ரயில்கள் தவிர ஏற்கனவே மும்பை, புனேயில் இருந்து கூடுதலாக 13 சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளோம். மேலும் இதுவரை 230 கோடை கால சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளோம்.

தேவைப்பட்டால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி உறுதி செய்யப்பட்ட டிக்கெட் இருந்தால் மட்டும் பயணிகள் பயணம் செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து