முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் சவரன் ரூ. 384 உயர்ந்து ரூ.35,424-க்கு விற்பனை

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 384 உயர்ந்து ரூ. 35,424-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.

இந்த நிலையில், தங்கம் விலை நேற்று உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 அதிகரித்து ரூ.35,424-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.4,428க்கு விற்பனையானது. 

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ. 73 ஆயிரத்து 400 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து