முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 68.  அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவுதான் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை அவர் காலமானார்.

1974-ம் ஆண்டு பீகார் கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான ரஞ்சித் சின்ஹா தனது பதவிக் காலத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரித்துள்ளார். இந்தோ - திபெத்தியன் படை, ரயில்வே பாதுகாப்புப் படை ஆகியவற்றின் தலைவராகவும் ரஞ்சித் சின்ஹா பணியாற்றி, பாட்னாவில் சி.பி.ஐ. அமைப்பின் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். அதன் பின் 2012-ம் ஆண்டு காங்கிரஸ் அரசில் சி.பி.ஐ. இயக்குநராக ரஞ்சித் சின்ஹா நியமிக்கப்பட்டார்.

2013-ம் ஆண்டு சி.பி.ஐ. இயக்குநராக ரஞ்சித் சின்ஹா இருந்தபோது, சுப்ரீம்கோர்ட்டின்  கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். கூண்டுக்குள் இருக்கும் கிளி, எஜமானார் பேச்சைக் கேட்பது போன்று சி.பி.ஐ. செயல்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட் விமர்சித்தது. 

தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்த வழக்கில் சின்ஹா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பெயரில் ரஞ்சித் சின்ஹா மீது 2017-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. 

சி.பி.ஐ. இயக்குநராக சின்ஹா இருந்த போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்குடன் கடும் மோதலில் ஈடுபட்டார். அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை முடிக்க மறுத்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து