முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெலகாவி மக்களவை தொகுதிக்கு இன்று (சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அந்த தொகுதியில் முதல்வர் எடியூரப்பா கடந்த புதன்கிழமை பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அதன் பிறகு அவர் இரவில் பெலகாவியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினார். அப்போது அவருக்கு லேசானா காய்ச்சல் உண்டானது.  உடனே அரசு டாக்டர்கள் அந்த ஓட்டலுக்கு வந்து எடியூரப்பாவுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்தனர். அதை அவர் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு அவருக்கு காய்ச்சல் குறைந்தது. பின்னர் நேற்று முன்தினம் காலை மீண்டும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மீண்டும் அவர் மாத்திரையை போட்டுக் கொண்டு பெலகாவி தொகுதியில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்திற்கு இடையே எடியூரப்பா சோர்வடைந்தார். மேலும் அவருக்கு காய்ச்சல் அதிகரித்தது.  இதையடுத்து அவர் பிரச்சாரத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு ஓட்டலுக்கு திரும்பினார். அங்கு அவர் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு ஓய்வு எடுத்தார். அவர் தங்கியிருந்த ஓட்டலை சுற்றிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.  இந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2-வது முறையாக எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து