முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10000 அபராதம்: உ.பி. அரசு

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

முக கவசம் அணியாமல் பிடிபட்டால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று உ.பி. அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மே 15-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.   இந்த கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   

முக கவசம் அணியாமல் பிடிபட்டால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். முதல் முறை பிடிபட்டால் 1000 ரூபாயும், இரண்டாவது முறை பிடிபட்டால் 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். இதற்கான உத்தரவை முதலவர் யோகி ஆதித்யநாத் நேற்று பிறப்பித்துள்ளார். 

தினசரி தொற்று எண்ணிக்கை 2000-க்கும் அதிகமாக உள்ள 10 மாவட்டங்களில் இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. லக்னோ, வாரணாசி, பிரயாக்ராஜ் போன்ற நகரங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. உ.பி.யில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 20510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1.11 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து