முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் கொரோனா: தேசிய அவசரநிலையை அறிவியுங்கள் : பிரதமர் மோடிக்கு கபில்சிபல் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசர நிலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மகராஷ்டிரா, டெல்லி, குஜராத்,பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊடரங்கை பிறப்பித்து மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை வகுத்துள்ளன.

பல மாநிலங்களுக்கு தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் நிலவுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, 

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில்,  நாட்டில் கொரோனாவால் குணமடைபவர்களைவிட பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருகின்றனர்.

தேசிய சுகாதார அவசரநிலையை அறிவியுங்கள். தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரங்களை ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும், மக்களின் உயிர்களை நீதிமன்றம் காக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து