Tommoody 2021 04 18

Source: provided

சென்னை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியில் நடராஜன் இடம்பெறாதது ஏன் என்று பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.

ஐ.பி.எல் 2021 தொடரின் 9-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்த்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஐதராபாத் அணி இந்த தொடரில் அடுத்தடுத்து தோல்வியடைந்தால் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டது. அதன்படி முதல் 2 போட்டிகளில் ஓபனிங்கில் சொதப்பிய விருதமான் சஹா அணியிலிருந்து நீக்கப்பட்டு பேரிஸ்டோவ் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். வெளிநாட்டு வீரர் ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக முஜீப் உர் ரஹ்மான் சேர்க்கப்பட்டார்.இந்தப் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத மாற்றமாக நடராஜனுக்கு பதிலாக கலீல் அகமது அணியில் சேர்க்கப்பட்டார்.

நடராஜன் அணியில் சேர்க்கப்படாதது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. முதல் 2 போட்டிகளிலும் நடராஜனின் பங்களிப்பு சிறப்பாக இருந்தப்பட்சத்தில் அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ஐதராபாத் அணியின் நிர்வாகி டாம் மூடி விளக்கமளித்துள்ளார். நடராஜன் நீக்கப்படவில்லை அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என்றுள்ளார்.

நடராஜன் ஆஸ்திரேலிய தொடரிலிருந்து நீண்ட நாட்களாக விளையாடி வருகிறார். இதனால் அவர் பணிசுமையை குறைப்பதற்காவே அவருக்கு பதில் கலீல் அகமதுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று டாம் மூடி தெரிவித்துள்ளார்.

ஆனால் சன்ரைசர்ஸ் அணியின் அனைத்து வியூகங்களும் ஏமாற்றமாகவே அமைந்தது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து