முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பயணத்தை போரிஸ் ஜான்சன் ரத்து செய்தார்

திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வர இருந்தார். இருப்பினும் இங்கிலாந்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வீசியதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் மாத இறுதியில் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவார் என அறிவிக்கப்பட்டது.

டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்யும் அவர் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது.‌ அது மட்டுமின்றி இந்தியாவில் இரட்டை மரபணு மாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என இங்கிலாந்தின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.‌ இதுகுறித்து தொழிலாளர் கட்சியின் செயலாளர் ஸ்டீவ் ரீட் கூறுகையில் அவர் இந்தியாவுக்கு பயணிப்பதை விட காணொலிக் காட்சி மூலமாக அதைச் செய்யலாம் என்று தெரிவித்தார்.

இந்த யோசனை மற்றும் இந்தியாவில் உள்ள கொரோனா நிலவரத்தை பரிசீலனை செய்த போரிஸ் ஜான்சன், தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். 

இந்தியாவில் தற்போதைய கொரோனா வைரஸ் சூழலில், பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள முடியாது என இரு நாட்டு அரசுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

நேரடி சந்திப்புக்கு பதிலாக, பிரதமர்கள் மோடி மற்றும் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார்கள். அப்போது பிரிட்டன் மற்றும் இந்தியா எதிர்காலத்தில் இணைந்து மேற்கொள்ளும் லட்சிய திட்டங்களை செயல்படுத்த ஒப்புக் கொண்டு தொடங்குவார்கள். இதைத் தாண்டி அவர்கள் வழக்கமான தொடர்பில் இருப்பார்கள். மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நேரில் சந்திக்க திட்டமிடுவார்கள்’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

வரும் நாட்களில் இரு நாடுகளிடையே காணொளி வாயிலாக கூட்டம் நடத்தப்பட உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து