முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரசை வடிகட்டி கொல்லும் ‘நானோ’ முக கவசம்

புதன்கிழமை, 21 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

கொரோனா வைரஸ் வாய், மூக்கு வழியாக உடலுக்குள் புகுந்துவிடுவதால் முக கவசம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனாலும் தற்போது பயன்பாட்டில் உள்ள முக கவசங்கள் முழுமையாக கொரோனா வைரசை தடுப்பதில்லை.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் மாண்டியில் உள்ள ஐ.ஐ.டி. கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து புதிய வகை முக கவசம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

இது நானோ தொழில் நுட்பத்தில் செயல்படக் கூடியதாகும். முக கவசத்தில் ஒரு சிறிய தடிமன் கொண்ட வடிகட்டி இணைக்கப்பட்டிருக்கும். இந்த வடிகட்டி மோலிபெடனும் சல்பைடு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

அது சிறிய கத்தி போல செயல்படும். அதற்குள் கொரோனா வைரஸ் நுழையும் போது அதை இந்த வடிகட்டி தடுக்கும். மேலும் அதை மீறி நுழையும் கொரோனா வைரஸ்களை கத்திபோல செயல்பட்டு குத்திகொதறிவிடும். எனவே கொரோனா வைரஸ்கள் கொல்லப்படும்.

அந்த கத்தி தலை முடியின் தடிமனில் ஆயிரத்தில் ஒரு மடங்குதான் இருக்கும். கொரோனா வைரஸ் 120 நானோ மீட்டர் அளவு கொண்டதாகும். அதில் 96 சதவீதத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த வடிகட்டிக்கு உண்டு. முககவசத்தை சிறிது நேரம் வெயிலில் வைத்தாலே அது தானாக சுத்தப்படுத்தி விடும். மேலும் அதை 60 தடவைக்கு மேல் சலவை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த முககவசத்தை பேராசிரியர் அமித் ஜெய்ஸ் வால் தலைமையிலான குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள். நானோ கார் என்று கேள்வி பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம், ஆனால் முககவசத்திலும் இப்போது நானோ வந்துவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து