முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை விவகாரம்: ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள் ஆகியவை கிடைப்பது, மேலும் அதுதொடர்பாக பிறப்பிக்கப்படும் பொதுமுடக்கம் ஆகியவை குறித்து தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்குவது தொடர்பான விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. 

பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.   விசாரணையின் போது, தலைமை நீதிபதி கூறியதாவது,

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் அதிகப்படியான உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பது, அத்தியாவசிய மருந்து பொருட்கள் கிடைப்பது, அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பது மற்றும் மாநில அரசுகள் அமல்படுத்தும் பொதுமுடக்கம் ஆகிய நான்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக நீதிமன்றம் கருதுகிறது.

இதுதொடர்பாக தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டம் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அதனால் அதுகுறித்த முழு அறிக்கை கொண்ட திட்டத்துடன்  மத்திய அரசு வர வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது. இதைத் தவிர நாடு முழுவதிலும் உள்ள ஆறு ஐகோர்ட்டுகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமை ஆகியவை குறித்து தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் சுப்ரீம் கோர்ட்டின்  அதிகாரத்திற்கு உட்பட்டு ஐகோர்ட்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், பொதுப் பிரச்சினையாக இருக்கக் கூடிய இந்த விவகாரத்தில் சில குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இவற்றை மொத்தமாக நாங்களே விசாரிக்கவிருக்கிறோம் என தெரிவித்த நீதிபதிகள் .இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே என்பவரை நியமித்து வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து